2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

கூண்டிலிருந்து தப்பி கழுத்தை நெரித்த கைதி

Editorial   / 2023 ஒக்டோபர் 18 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

  நீதவான் நீதிமன்ற அறையின் கதவு திறக்கப்பட்டதும், அதிலிருந்து தப்பிய கைதி, வழக்கு விசாரணைக்கு ஆஜராகியிருந்த சட்டத்தரணி ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் கலகெதர நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. நீதிமன்ற அறையில் இருந்த  பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் அந்த நபரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

கழுத்து நெரிக்கப்பட்ட சட்டத்தரணி மருத்துவ சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்   தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் கண்டி களுவான பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்பது வயதுடைய நபர் 760 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கலகெதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கலகெதர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .