2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

குளவிக்கொட்டுக்கு அஞ்சி ஓடியதால் 11 பேருக்கு பாதிப்பு

Editorial   / 2025 ஜனவரி 02 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளவி தாக்குதலுக்கு உள்ளான பெண்ணொருவர் அலறியடித்து கொண்டு, கம்பளை அட்டபாகேயில் உள்ள உடகம கிராமிய வைத்தியசாலைக்குள் ஓடியதை அடுத்து, அப்பெண்ணின் பின்னால் துரத்திவந்த குளவிகள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட  11 பேர் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை ஊழியர்கள் நால்வர் மீதும், மருத்துவ மனைக்கு வந்திருந்த எட்டு பெண்கள் மீதும்,   மருத்துவர் மீதும் குளவிகள் கொண்டியுள்ளன.

அட்டபாகே கலவெல்கொல்ல பிரதேசத்தில் மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூட்டை பறவையொன்று தாக்கியதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்விடத்திலிருந்து பயணித்த பெண் ஒருவரை இந்த குளவி கொட்டியதால் குளவி கொட்டியதில் இருந்து தப்பிக்க அலறியடித்து கொண்டு அப்பெண் வைத்தியசாலைக்கு ஓடியுள்ளார்.

அப்போது மருத்துவமனையில் சிகிச்சைகளை பெறுவதற்காக, அதிகமானோர் அங்கு கூடியிருந்தனர். இந்த பெண் கூச்சலிட்டபடி அந்த கும்பலிடம் சென்றபோது, ​​அவரை பின்தொடர்ந்து வந்த குளவிகள் அனைவரையும் தாக்கின.

இக்குழுவினர் வைத்தியசாலையின் ஜன்னல் கதவுகளை மூடி தீ குவியல்களை வீசி தப்பிச் செல்ல முற்பட்டனர். எனினும், முயற்சி கைகூடவில்லை. இந்நிலையில், இரண்டு அம்பியூலன்ஸ்கள் வைத்தியசாலைக்கு அவசரவாக அழைக்கப்பட்டு, குளவிகளால் கடுமையாக கொட்டப்பட்டவர்கள் கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள கடைகளின் ஊழியர்களுக்கும் குளவிகள் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவர்களும் கடைகளை மூடிவிட்டு தீயை கொளுத்திவிட்டு தப்பிச் செல்ல முற்பட்டதாக தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X