2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

குளவி தாக்குதல் ; சிறுவன் உட்பட 7 பேர் காயம்

Janu   / 2024 ஜனவரி 04 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிக்கோயா,பட்டல்கல தோட்ட பாதையில் பயணித்துக்கொண்டிருந்த சிலர் மீது, குளவி களைந்து கொட்டியதில், 14 வயதான சிறுவன் உட்பட 7 பேர் காயமடைந்து டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தாக்கப்பட்ட ஒருவரிடம் விசாரித்த போது, ​​தான் வீதியில் சென்று கொண்டிருந்த போது, ​​படல்கல தோட்ட அலுவலகத்திற்கு அருகில் வைத்து திடீரென குளவி தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதலுக்குள்ளான 14 வயது சிறுவன் உட்பட 06 ஆண்களும் பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்  பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. 

சுதத் ஹேவா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .