2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்காகிய ஏழு பேர்

Freelancer   / 2024 செப்டெம்பர் 07 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ - கேர்க்கசோல்ட் தோட்டத்தில் நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் ஏழு பேர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தேயிலை செடியின் வேர் பகுதியில் கட்டப்பட்டு இருந்த குளவிக் கூடு களைந்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மலையக பகுதிகளில் தொடரும் குளவி கொட்டினால் நாளாந்தம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X