2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

குறுக்கு​ வீதியில் பயணித்த லொறி விபத்து

Janu   / 2024 டிசெம்பர் 22 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் சனிக்கிழமை (21) இரவு லொறி ஒன்று செங்குத்தான வளைவு ஒன்றில், கட்டுப்பாட்டை இழந்து மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக   நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறியில்  திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல்  இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் எனினும் லொறியில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

டி.சந்ரு, செ.திவாகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X