2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

குத்தகையில் கத்திக்குத்து: ஒருவர் காயம்; நால்வர் கைது

Mayu   / 2023 டிசெம்பர் 19 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

குத்தகை காணி விவகாரத்தில், அக்காணியை மீளவும் ஒப்படைக்கவேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த கிருஷ்ண குமார்  ( 48 வயது ) என்பவர் மீது சனிக்கிழமை (16) இரவு  மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில், அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம்,  நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலிபண்ட தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்கான நபர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர், குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நால்வரும் ஒலிபண்ட தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் ஆவர்.  

ஒலிபண்ட் தோட்டம் கீழ் பிரிவுக்குரிய, இலக்கம் 05 தேயிலை மலையில் 5 ஏக்கர் நிலத்தை தனி நபர் ஒருவருக்கு, குத்தகை செய்வதற்கு தோட்ட நிர்வாகம் குத்தகைக்கு வழங்கியிருந்தது. அவர், அந்த ஏக்கரில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகின்றார்.

குத்தகை காலம் முடிந்த நிலையில் அந்த விவசாய நிலத்தை தோட்ட நிர்வாகத்துக்கு மீள கையளிப்பதில், குத்தகைதாரருக்கும்,,தோட்ட நிர்வாகத்துக்கும்  இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்த குத்தகை நிலம்தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் நிறைவில், அந்த குத்தகை நிலத்தை தோட்ட நிர்வாகத்துக்கே மீளவும் கையளிக்கப்படவேண்டுமென நீதிமன்றத்தால் உத்தரவிட்டப்பட்டது.

அந்த நிலத்தில் இருந்து விலகிசெல்வதற்கும், விவசாயப் பொருட்களை அகற்றுவதற்கும் குத்தகைகாரருக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், அந்த நிலத்தில் தோட்ட நிர்வாகம் தேயிலைச்செடிகளை பயிரிட்டுள்ளது.

அந்த நிலத்துக்கு மட்டும், ஒருவரை காவலில் ஈடுபடுத்தியுள்ளது. இந்நிலையிலேயே இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை  இச் சம்பத்துடன்  தோட்ட நிர்வாகமும்,தோட்ட அதிகாரியும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறி செவ்வாய்க்கிழமை (19)  காலை   கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .