2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

குடும்பத்துடன் ஐஸ் விற்ற மைத்துனர்கள் கைது

Janu   / 2025 ஏப்ரல் 10 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்பத்துடன் நாடு முழுவதும் பயணம் செய்யும் போர்வையில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில்  ஈடுபட்ட மைத்துனர்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, நாட்டில்  பல்வேறு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 28,400 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புதன்கிழமை (09) அன்று ஹட்டன் நீதிபதி மற்றும் நீதவான் எம். பாருக்கின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இம்மாதம் (22) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மாத்தறை தெலிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த பிரசாத் புத்திக (44) மற்றும் காலி அதவல பகுதியைச் சேர்ந்த பிரணதீப் சிறிகுமார (31) ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தங்களது மனைவிகள் மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் பயணம் செய்வதாக கூறி,   ஈஸி கேஷ் மூலம் பணத்தைப் பெற்று, வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் ஐஸ்  போதைப்பொருளை வைத்து  சென்று, வாங்குபவருக்கு தகவல் வழங்கியுள்ளனர். கடந்த புதன்கிழமை (02) அன்று கினிகத்தேன கடவல பகுதியில் சந்தேக நபர்கள் பயணித்த காரை சோதனைக்கு உட்படுத்திய போது பொதி செய்யப்பட்ட ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ,  .

வட்டவல, ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, நுவரெலியா, வெலிமட, ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் பொதிகள் மற்றும் சந்தேக நபர்கள் பயணித்த கார் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ரஞ்சித் ராஜபக்ஷ

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .