2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கிரிக்கெட் மட்டையால் அடித்து மாணவன் படுகொலை

Editorial   / 2024 மே 01 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கிரிக்கெட் திடல் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இ​டையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மற்றுமொரு மாணவனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி மொன்டி கிறிஸ்டோ தோட்டத்தின் கீழ் பகுதியைச் சேர்ந்த ஸ்டேன்லி ஸ்டெப்பில் (வயது 13) என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரு மாணவர்களும் பாடசாலை நண்பர்கள் எனவும், இருவரும் கடந்த 23ஆம் திகதி தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற போது, ​​கிரிக்கெட் திடல் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில், மற்றைய மாணவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பலத்த காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன், திங்கட்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .