2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

கிக்பொக்சிங் போட்டியில் நபீர் முதலிடம்

Janu   / 2024 டிசெம்பர் 04 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024  நவம்பர் மாதம் 29 ஆம்‌ திகதி முதல் டிசம்பர் 1ஆம் திகதி வரை நாவலப்பிட்டிய ஜயதிலக்க விளையாட்டரங்கில் நடைபெற்ற  அகில இலங்கை கிக்பொக்சிங் போட்டித் தொடரில் 12 வயதுக்குட்பட்ட பிரிவில்  எம்.என்.‌ நபீர் அஹமட் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் இந்த மாணவன் வெலம்பொடையைச் சேர்ந்த M.N.நலீம் S A. நசீரா தம்பதியினரின் புதல்வராவார்‌.

இந்த வருடம் தங்கப் பதக்கம் வென்ற இந்த மாணவன் கடந்த வருடமும் அதற்கு முந்தைய வருடம் நடந்த போட்டிகளில் முறையே தங்கப் பதக்கம் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

கம்பளையை சேர்ந்த D.M. நவ்ஷாத் , ‌ இந்த மாணவரின்‌ பயிற்றுப்பாளராகசெயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .