2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

காலநிலையை எதிர்வு கூறும் கருவி மடக்கும்புரவில் அறிமுகம்

Editorial   / 2024 ஒக்டோபர் 25 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கௌசல்யா

நுவரெலியா மாவட்டம் ,மடக்கும்புர தொழிற்சாலையில் Solidaridad நிறுவனத்தின் அனுசரணையில்  காலநிலையை முன்கூட்டியே எதிர்வுகூறும் கருவியொன்று இந்தியாவிலிருந்து முதல் முறையாக இறக்குமதி செய்யப்பட்டு மடக்கும்புர பகுதியில்  அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

மடக்கும்புர தோட்ட பொது முகாமையாளர் கௌஷல் மாதவன் ஏற்பாட்டில் குறித்த பகுதியின் துணை தலைமை நிர்வாக அதிகாரி கீத்குமார தலைமையின் கீழ் இடம்பெற்ற  நிகழ்வின் போது மண் பரிசோதனை செய்யக்கூடிய கருவி, மற்றும் தேயிலை கொழுந்தின் தரத்தினை தானாக ஆய்வு செய்து தரவுகளை வழங்கக்கூடிய தன்னியக்க கருவியும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எல்பிட்டிய பிளான்டேஷனுக்கு உட்பட்ட முகாமையாளர்கள்,தோட்ட அதிகாரிகள், தொழிநுட்பவியலாளர்கள், தொழிற்சாலை அதிகாரிகள்  என பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .