2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

காதல் விரிசலால் உயிரை மாய்த்த மாணவன்

Janu   / 2025 ஏப்ரல் 22 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபிட்டிய  பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் சனிக்கிழமை (20) அன்று தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 கே.எம். தருஷ தில்ஷான் காவிந்த என்ற 19 வயதுடைய  மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவனின், காதல் உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக  கடிதம் ஒன்றை எழுதி வைத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின்  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

சுமனசிறி குணதிலக்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .