2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

கல்லூரிக்குள் வௌ்ளம்: கல்வி நடவடிக்கை பாதிப்பு

Editorial   / 2023 ஒக்டோபர் 12 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

மலையகத்தில்  தொடரும் சீரற்ற வானிலை காரணமாக புதன்கிழமை (11) பெய்த கடும் மழையால் கெசல்கமுவ ஓயாவுக்குகு நீரேந்தி செல்லும் கிளை ஆறுகள் பெருக்கெடுத்தன. இதன் காரணமாக பல தாழ்வான பகுதிகள் வெள்ள  நீரினால் மூழ்கின.   

பொகவந்தலாவை,  பிரதேசத்தில்   பெய்த கடும் மழையின் காரணமாக பொகவந்தலாவ சென் மேரிஸ் தேசிய கல்லூரியில் பல பகுதிகள் வெல்ல நீரில் மூழ்கியுள்ளதோடு வகுப்பறைகளில் நீர் நிரம்பி உள்ளது.

சுமார் 2 மணித்தியாலங்களாக பெய்த கடும் மழை காரணமாக தேயிலை தோட்டங்களுக்கு செல்லும் வீதிகளும் வெள்ள நீரில் மூழ்கின.

பொகவந்தலாவை,  சென் மேரிஸ் தேசிய கல்லூரியின் வகுப்பறைகளுக்குள் வெள்ள நீர் உற்புகுந்தமையினால் தரம் 8இல் 4 வகுப்பறைகளும், உயர்தரத்தில் வர்த்தக பிரிவு, விசேட கல்வி பிரிவு, ஆங்கில அழகியற் பிரிவு, தரம் 7ல் 3 வகுப்பறைகளும், தரம் 9இல் ‘பி’ பிரிவு ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டன.    

“வௌ்ளநீர் புகுந்த வகுப்பறைகளை  பாடசாலை மாணவர்களால்  சுத்தம் செய்ததன் பின்னரே ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன” என்று கல்லூரியின் அதிபர் எ.வேலுசாமி தெரிவித்தார் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .