2025 ஜனவரி 02, வியாழக்கிழமை

கால்வாயில் இருந்து சடலம் மீட்பு

Freelancer   / 2024 நவம்பர் 02 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தண்ணீர் தாங்கிக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் நீர் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு வலையில் இருந்து, இன்று (2) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு உள்ளது.

இந்த சடலம், காசல்ரி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் அமைப்பின் ஊடாக இழுத்துச் செல்லப்பட்டு, பாதுகாப்பு வலையில் சிக்குண்டு இருக்கலாம் என, பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள், நீர் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு வலையில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X