2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கருங்கல்லால் தாக்கியதில் சித்தப்பா பலி

Janu   / 2025 ஏப்ரல் 17 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருங்கல்லால் முகத்திலேயே தாக்கியதில், சித்தப்பா மரணமடைந்த சம்பவம், வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய ரணவராவ பிரதேசத்தில், கடந்த 13ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், அதே இடத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை   கொல்லப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட நபர் ரந்தெனிய, ரனவர பகுதியைச் சேர்ந்த தேவயலகே விஜேரத்ன (52) ஆவார். பொலிஸார் நடத்திய விசாரணையில், பழைய தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

 இறந்தவரின் உடலுக்கு அருகில் ஒரு பெரிய கருங்கல்லும் கிடந்துள்ளது. சந்தேக நபரும் அவரது சித்தப்பாவும் ஒன்றாக மது அருந்திக்கொண்டிருந்தனர், இருவருக்கும் இடையே ஒரு பழைய தகராறு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, உறவினரான சித்தப்பாவை அந்த நபர் அடித்து உதைத்துள்ளார். சித்தப்பா தரையில் விழுந்த பிறகு, அவர் அருகிலுள்ள ஒரு கருக்கல்லை எடுத்து சித்தப்பாவின்  முகத்தில் பலமுறை அடித்தார். அவர், இறந்துவிடவே, அங்கிருந்து சந்தேகநபர் தப்பியோடியுள்ளார் என்றும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .