Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 28 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியாவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்த கனேடிய உயர்ஸ்தானிகர் “எரிக் வோல்ஸ்” க்கும் மலையக மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு நுவரெலியா கிறாண்ட் ஹோட்டலில்,இன்று (28) காலை இடம்பெற்றது.
மரியாதை நிமிர்த்தம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஸ்ணன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணி பிரதி தலைவருமான ஆர். ராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணி பதில் பொதுச் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின் போது மலையக மக்கள்,மற்றும் நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ்க்கு எடுத்துரைக்கப்பட்டது. என சந்திப்பில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் இந்த சந்திப்பில் மலையக கல்வி வளர்ச்சி தொடர்பாகவும் மலையக அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடியதாகவும் ,இன்று நாட்டில் எதற்கும் ஏற்புடையாத வகையில் கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டம் இந்நாட்டிற்கு பொருத்தமில்லை எனவும் இது அடக்கு முறை சட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டதாக வே.இராதாகிருஸ்ணன் ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
அத்துடன் இந்த அடக்குமுறை சட்டத்தின் ஊடாக நாட்டு மக்கள் மீது பல்வேறு துன்பங்களை திணிப்பது ,ஊடக அடக்குமுறை,தொழிற்சங்க அடக்குமுறை நிலவுவதாகவும் தூதுவர் கவனத்திற்கு பிரஸ்தாபிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago