2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

கந்தப்பளையில் மண்சரிவு

Freelancer   / 2023 ஒக்டோபர் 18 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா- கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொங்கோடியா தோட்டத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

கந்தப்பளை நகரில் இருந்து கொங்கோடியா,கல்லாலவத்தை தோட்ட வழியாக இராகலையை நோக்கி செல்லும் பிரதான வீதியில் இந்த மண் சரிவு ஏற்பட்டு இவ் வீதியூடான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொங்கோடியா தோட்ட பகுதியில் புதிதாக புனரமைக்கப்பட்டு செப்பணிடப்பட்ட வீதியில் பாரிய மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டு ள்ளது.

எனவே இவ் வீதியூடாக விவசாய காணிகள் மற்றும் குடியிறுப்புகளுக்கு பயணிக்கும் பொது மக்கள் மாற்று வழியை பயன்படுத்துமாறு கந்தப்பளை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் இவ் வீதி ஊடான வாகன போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆ.ரமேஸ்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .