2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கந்தப்பளையில் 09 குடும்பங்கள் இடம்பெயர்வு

Mayu   / 2024 ஜனவரி 01 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பொலிஸ் பிரிவுற்குட்பட்ட கந்தப்பளை கொங்கோடியா மேல் பிரிவு தோட்டத்தில் 09 குடும்பங்களை சேர்ந்த 44 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் காட்டாறுகள்,கால்வாய்களில் நீர் பெருக்கமெடுத்து தாழ் நிலம் பகுதிகளில் வெள்ளம் பாய்ந்து விவசாய நிலங்கள்,வீடுகள், பிரதான வீதிகள் என பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கந்தப்பளை கொங்கோடியா தோட்டத்தில் காணப்படும் புது வீட்டு பகுதிகளில் ஆங்காங்கே பாரிய மண் மேடுகள் சரிவுகள் ஏற்பட்டு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் கொங்கோடியா தோட்டம் மேல் பிரிவில் கடந்த 2002 ஆம் ஆண்டு தோட்ட நிர்வாகத்தினால் வீட்டற்றவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் பயனாளிகள் கடன் அடிப்படையில் அமைத்துக் கொண்ட தனி வீட்டு பகுதிகளில் இந்த மண்மேடுகள் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மண்மேடு சரிவு ஏற்பட்டுள்ள குறித்த குடியிறுப்பு பகுதி மண்சரிவு அபாய பகுதியாக அடையாளம் காணப்பட்டு அப்பகுதியில் வசித்த 09 குடும்பங்களை சேர்ந்த 44 பேரை அகற்றி அவர்களை அத் தோட்டத்தின் பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக தக்கவைத்துள்ளனர்.

அதேநேரத்தில் இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பத்தினரை நேரில் சென்று பார்வையிட்ட நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர் W.M.பிரதிப் தனஞ்சூரிய அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை வழங்க நடவடிக்கை ​எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆ.ரமேஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .