Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 ஜனவரி 27 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமா மகேஸ்வரி
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஓபநாயக்க பொலிஸ் பிரிவிலுள்ள ஹுனுவலை தோட்டத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
ஞாயிற்றுக்கிழமை (26) இடம் பெற்ற இச்சம்பவத்தில் 03 பிள்ளைகளின் தந்தையான ஜோசப் இராஜேந்திர குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினம் பிரதேசத்திலுள்ள இவ்விரு இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து அப்பகுதி கிராம சேவையாளர்ரின் தலைமையில் இப்பகுதியில் உள்ள பிரதான வீதியொன்றை "தூய்மையான இலங்கை" வேலைத்திட்டத்தின் கீழ் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது
சுமார் 100 பேர் கலந்து கொண்ட இச்சிரமதானத்தில் பெரும்பான்மை இன பெண் ஒருவரை காதலித்த தோட்ட தமிழ் இளைஞர் ஒருவரின் தந்தையும் அந்த பெண்ணின் தாத்தாவும் கலந்து கொண்டுள்ளனர் .
இவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியது. இதன் போது பெண்ணின் தாத்தா சிரமதான பணிக்கு கொண்டு வந்த மண் வெட்டியால் தலையில் தாக்கியதில் தமிழ் இளைஞனின் தந்தை தலையில் பலத்த காயம் மேற்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்த போதிலும் பெண்ணின் தாத்தா மட்டுமே நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்
பிரேத பரிசோதனைக்காக பிரேதம் காவத்தை பொது வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இது இவ்வாறிருக்க திருமணம் முடிக்காமல் இந்த காதல் ஜோடி, காதலன் வீட்டில் பல மாதங்களாக தங்கி இருப்பதாகும் பெண்ணின் தாத்தா இது குறித்து வினவிய போதே இந்த இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .