Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 ஒக்டோபர் 02 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
"தெடிகம" என்ற பெயரைப் பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்தி தங்க அடகு வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கண்டியில் தனியார் நிறுவனமொன்றுக்கு தெடிகம என்ற வர்த்தக நாமத்துடன் கூடிய வர்த்தக முத்திரையை பயன்படுத்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி. பெர்ணாந்து இடைக்கால தடையுத்தரவு விதித்தார்.
தெடிகம என்ற வர்த்தக முத்திரை பயன்படுத்த தனக்கு உரிமை இருப்பதாக பிரதிவாதி தரப்பில் முன்வைக்கப்பட் ஆட்சேபனையை நிராகரித்து இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டது.
தெடிகம வர்த்தக நாமத்தை ஒத்த பெயர்களைப் பயன்படுத்தி நியாயமற்ற போட்டியில் ஈடுபடுவதைத் தடை செய்து குருநாகல் வீதி, கட்டுகஸ்தோட்டை, கண்டி, விலாசத்தில் இயங்கும் டி.ஏ.சி.பி. தெடிகம அடகு தனியார் நிறுவனத்திற்கு எதிராக இந்தத் தடையுத்தரவு வழங்கப்பட்டது.
தெடிகம அடகு நிலையம், தெடிகம தங்கக் கடன் நிலையம், தெடிகம அடகு தரகர்கள், ஆகிய வர்த்தக நாமங்களை பயன்படுத்துதல் தெடிகம பெயரில் விளம்பரம் செய்தல், தெடிகம என்ற பெயரில் புதிய கடைகளைத் திறப்பது என்பவற்றுக்கு எதிராக இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை வீதி, மஹரகம தெடிகம குரூப் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் தலைவர் ரஞ்சன் மலின் தெடிகமவினால் புலமைச் சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த பின்னர் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுதத் பெரேரா அசோசியேட்ஸின் ஆலோசனையின் பிரகாரம்,சட்டத்தரணி மனோஜ் பண்டார நீதிமன்றில் ஆஜரானார். தெடிகம மீதான மக்களின் நம்பிக்கையையும் நற்பெயரையும் பயன்படுத்தி பிரதிவாதி நிறுவனம் போலியான வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர் 1950 இல் நிறுவப்பட்ட தெடிகம குரூப் பிரைவேட் லிமிடெட், இலங்கை முழுவதும் 281 கிளைகளை நிறுவியுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் 2023 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துரிமைச் சட்டத்தின் 144 வது பிரிவின்படி, பிரதிவாதி இந்தப் பெயரைப் பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதிவாதி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி குவேரட சொய்சா ஆஜரானார். தமது கட்சிக்காரரின் பெயரி தெடிகம என்று வருவதாலே அதனை பயன்படுத்தியதாகவும் மனுவை நிராகரிக்குமாறும் அவர் கோரினார் அவரின் கோரிக்கையை நிராகரித்த நீதவான் தெடிகம என்ற பெயரைப் பயன்படுத்த இடைக்கால தடைவிதித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago