2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவை என்.சியில் கலந்து விற்ற பெண் கைது

Freelancer   / 2024 நவம்பர் 02 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

என்.சி இல் போதைப்பொருளை கலந்து விற்பனை செய்த மூன்று பிள்ளைகளின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து 1.850 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட கஞ்சா  போதைப்பொருளை என்.சியில் கலந்து விற்பனை செய்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயார் (56) கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சுகாதார அமைச்சினால் தடைசெய்யப்பட்ட என்.சி என்ற போதைப்பொருள் சிறிய பொதிகளில் அடைக்கப்பட்டு இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் பொகவந்தலாவ கொட்டியாகல தோட்டத்தை சேர்ந்தவர் எனவும், சந்தேக நபரை பெண் பொலிஸார் கைது செய்து சோதனையிட்ட போது, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட என்.சி என்ற போதைப்பொருளின் சிறிய பொதிகள் பலவற்றை உடலில் மறைத்து வைத்திருந்ததாகவும் அதிகாரி தெரிவித்தார்.

சந்தேக நபரை கைது செய்ததை அடுத்து, வீட்டில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.850 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .