2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Janu   / 2025 ஜனவரி 28 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலுக்கமைய புளியங்குளம் சேமமடு பிரதேசத்தில் திங்கட்கிழமை (27) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பெரியகுளம், கனகராயன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் இங்கினியாகலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இங்கினியாகலை பரகஹகெலே பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை தன் உடமையில் வைத்திருந்த பரகஹகெலே, அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கினியாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .