2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

“உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவும்”

Mithuna   / 2023 டிசெம்பர் 28 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் பணிபுரிந்து வருகின்ற இரண்டு ஆசிரியர்கள் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் தொடர்பாக உடன் விசாரணைகளை ஆரம்பிக்கும்மாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் பதுளை வலையகல்வி பணிமனையின் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த இரண்டு ஆசியர்களும் அதே பாடசாலையில் கல்வி பயின்று வருகின்ற ஐம்பது மாணவர்களோடு தனியார் வகுப்பு நடத்தும் பேரில், பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டு வருவதாகக் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதன் அடிப்படையில், உடன் விசாரணைகளை ஆரம்பித்து கல்வி அமைச்சுக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த இரண்டு ஆசிரியர்களும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பாரதூரமான விடயமாக பார்க்க வேண்டியுள்ளது.

இதேவேளை, இந்த விசாரணைக்காக மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .