Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 மார்ச் 11 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நானுஓயா பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நானுஓயா பகுதிக்கு ஹரோயின் போதை பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (10) பதிவாகியுள்ளது .
மாவத்தகம பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
நுவரெலியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது புகையிரதத்தில் வியாபாரம் செய்துக்கொண்டிருக்கும் ஒருவரிடமிருந்து , சூட்சமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 410 மில்லிகிராம் நிறையுடைய ஹரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது குறித்த நபர் ஈசி கேஸ் முறையில் போதை பொருள் விநியோகிப்பவர் என தெரிய வந்துள்ளதுடன்,சந்தேக நபரும் ,கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் திங்கட்கிழமை (11) ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இனி வரும் காலங்களில் நாளாந்தம் மலையக புகையிதங்களில் போதைப் பொருள் தேடுதல் நடவடிக்கை இடம் பெறும் என நுவரெலியா மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago