2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இளம் பூசகர் தன்னுயிரை மாய்த்தார்

Editorial   / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

16 வயதான இளம் பூசகர், தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தில் இந்துக்கோவிலில் பூசகருக்கு உதவியாளராக  செயற்பட்ட இளம் பூசகரே இவ்வாறு மரணித்துள்ளார்.

கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மடுவத்திலேயே அவரது சடலம் கிடக்கின்றது என்று நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒஸ்போன் தோட்டத்தின் கீழ் பிரிவைச் சேர்ந்த சுந்தரமுல்லன் ஜனநாதன் என்ற இளைஞனே இவ்வாறு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

பிரதான பூசகர் கோவிலில் இல்லாத சமயத்திலேயே அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ள நோட்டன்பிரிஜ் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்​ தெரிவித்தனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .