Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 மே 28 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆண் முகாமையாளர் ஒருவரை கடத்திச் சென்று, பாலியல் வன்புணர்ந்து, அதனை வீடியோவாக பதிவுச் செய்துக்கொண்டதன் பின்னர், அவரிடமிருந்த பெறுமதியான பொருட்களை அபகரித்துவிட்டு, முகாமையாளரை கைவிட்டுச் சென்ற சம்பவமொன்று கண்டி- வத்தேகம பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
வத்தேகம நகரிலுள்ள பல்பொருள் அங்காடி நிலையமொன்றின் முகாமையாளரே, இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு, காட்டுப்பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 1,18,500 ரூபாய் பணம், இரண்டு அலைபேசிகள், வௌ்ளி மோதிரம் மற்றும் கைக்கடிகாரம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் ஐந்து நாட்களுக்குப் பின்னரே, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, சந்தேகத்தின்பேரில் நால்வரை கட்டுக்கஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியில் சென்றுக்கொண்டிருந்த போதே, 23 ஆம் திகதி மாலை, வேனில் வந்த சிலரால் முகாமையாளர் கடத்திச் செல்லப்பட்டார். வன்கொடுமைக்கு உள்ளான முகாமையாளரை, அன்றிரவே வேனில் அழைத்துவந்து வீதியில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
கடத்தல்காரர்கள் ஆடைகளை களைந்து வீடியோ எடுத்து அச்சுறுத்தியமையால், பொலிஸில் முறைப்பாடு செய்ய காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளையிடப்பட்ட பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள போதிலும், பணத்தை கைப்பற்றவில்லை என்றும் அறியமுடிகின்றது.
ஆண் முகாமையாளரை கடத்திச் செல்வதற்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் வேனை கைப்பற்றியுள்ள பொலிஸார், சந்தேகநபர்களை வேனுடன், கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மொஹொமட் ஆஸிக்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
28 minute ago