2025 ஏப்ரல் 14, திங்கட்கிழமை

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் பகிஷ்கரிப்பு

Mayu   / 2024 டிசெம்பர் 10 , பி.ப. 01:20 - 0     - 45

நீலமேகம் பிரசாந்த்

கொத்மலை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் அடிப்படை சம்பளத்தில் 5000 ரூபாய் உயர்த்தக்கோரி தொழிற்சாலை முன்பாக பகிஷ்கரிப்பு போராட்டத்தை செவ்வாய்யக்கிழமை (10)  முன்னெடுத்தனர்.

ஆடைத்ழிற்சாலை ஊழியர்கள் கடந்த புதன்கிழமையில் இருந்து, தொழிற்சாலை நிர்வாகத்திற்கு சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை கோரிவந்த நிலையில், எவ்வித பதிலும் வழங்காத காரணத்தினால் இன்று காலை முதல் பகீஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு இன்றும் உரிய தீர்வு கிடைக்க வில்லையெனவும் தொழிற்சாலை நிர்வாக ஊழியர்களும் உறுப்பினர்களும் தொழிற்சாலைக்கு சமூகம் தரவில்லையென கொத்மலை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X