Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 28 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிகிச்சை பெற்று வந்த நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட 18 வயதுடைய இளைஞன் அலைபேசிக்கு அடிமையாகி மன உளைச்சலுக்கு ஆளானவர் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அலைபேசியை கைப்பற்றியதையடுத்து கத்தியை எடுத்து தனது உடலின் பல பாகங்களை வெட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பன்வில கந்தேகும்புர பிரதேசத்தை சேர்ந்த ஹர்ஷன லக்ஷான் தில்ருக்ஷ (வயது 18) என்ற இளைஞன் ஒரு நாளைக்கு 18 மணித்தியாலங்களை அலைபேசியுடன் தனியாக செலவிடுவதுடன், தொடர்பு இல்லாமல் நேரத்தை கடத்துவதற்காக பல்வேறு வீடியோ கேம்களுக்கு அடிமையாகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
தெல்தெனிய வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு குறித்த இளைஞன் தனது பெற்றோருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்ததாகவும் அக்கடிதத்தில் தனது பெற்றோரை கடுமையாக குற்றம் சுமத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து இளைஞன் தன்னுயிரை மாய்த்துக்கொண்டமை விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெல்தெனிய வைத்தியசாலை நிர்வாகத்திற்கு கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சேனகக்க தலகல பணித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago