Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2025 ஏப்ரல் 27 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், வேரகல நீர் தேக்கத்தின் வான் கதவுகள் எவ்வித முன் அறிவித்தலுமின்றி திறக்கப்பட்டமையால் கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீர்மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து மாணிக்க கங்கையில் நீராடி கொண்டிருந்த ஒருவர் நீரில் அடித்துச் சென்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்
இந்த சம்பவம் சனிக்கிழமை (26 ) இடம் பெற்றுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் ஹட்டன் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 52 வயதுடைய பழனி லோகேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து தனது நேர்த்திக்கடனுக்காக கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு சென்றிருந்த வேளை மாணிக்க கங்கையில் நீராடி கொண்டிருந்த போது நீரின் வேகம் அதிகரித்து அள்ளுண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட சடலம் கதிர்காமம் பிரதேச வைத்தியசாலையில் இருந்து சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எவ்வித முன் அறிவித்தல் இன்றி வேரகல நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமை தொடர்பாக நீர் தேக்கத்தின் பொறியியலாளர் மீது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எஸ். சதீஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago