2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

“அம்மா என்னை மன்னிக்கவும்”

Editorial   / 2025 மார்ச் 31 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

"மன்னிக்கவும், அம்மா. நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். நான் எப்போதும் கஷ்டப்படுகிறேன். வலியைத் தாங்குவது கடினம். என் இதயம் மிகவும் பலவீனமாக உள்ளது. தயவுசெய்து என்னை மன்னியுங்கள்."

"எனது மரணத்திற்குக் காரணம் சலிப்பு, எனக்கு மகிழ்ச்சி இல்லை" என்று கடிதம் எழுதிய யூடியூப் சேனல் உரிமையாளரின் உடல், கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டலின் பூந்தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்த நபர் கண்டி குண்டசாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய அசன தனஞ்சய பண்டார ஆவார்.

இறந்தவர்   ஹோட்டலுக்கு ஞாயிற்றுக்கிழமை (30) வந்து, ஹோட்டலின் 31வது மாடியில் உள்ள 16வது அறையில் திங்கட்கிழமை (31)  தங்கியிருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிலியந்தலை, மடபத்த, பொல்ஹேன பகுதியில் வசிக்கும் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், ஹோட்டலின் நான்காவது மாடியில் உள்ள பூந்தோட்டப் பகுதிக்கு அருகில் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்துவிட்டதாக அளித்த புகாரைத் தொடர்ந்து, சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .