Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனிதத் தொடர்பு இல்லாத, மனிதப் புலன்களுக்கு அப்பாற்பட்ட, மனித சக்திக்கு மீறியதே அமானுஷ்யமாகும். அவ்வாறு நிலத்தின் கீழ் அமானுஷ்யமான சத்தம் கேட்பதால் மக்கள் அச்சத்துடன் இருக்கவேண்டிய நிலைமை நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலை வேத்தலாவ எனும் கிராமத்தில் நிலத்தின் கீழ் நீர் செல்வது உட்பட பல்வேறு விதமான அமானுஷ்யமான சத்தம் கேட்பதாக கிராம மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலுக்கு அமைய அக்கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இரவு நேரத்தில் மட்டும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஞாயிற்றுக்கிழமை ( 15) முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
கொத்மலை வேத்தலாவ கிராமத்தில் வாழும் மக்கள் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.
இந்த கிராமமானது மலைகள் அற்ற ஒரு சமவெளிப் பகுதியில் கொத்மலை நீர்தேக்கத்திற்கு அருகிலும் அமைந்துள்ளதாகவும் தெரிவித்த நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, அங்கு வழமையாக நிலத்துக்கு கீழ் இருந்து பல்வேறு சத்தங்கள் கேட்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.
இந்நிலைமையானது அச்சப்படுவதற்கான காரணியாக இதுவரை அடையாளம் எதுவும் காணப்படவில்லை. எனவும், எனினும் நுவரெலியா மாவட்ட கட்டிடம் மற்றும் நிலம் ஆய்வு மைய அதிகாரிகளின் உதவியோடு குறித்த கிராமம் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்க நடவடிக்க எடுக்கப்படவுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட மேலும் தெரிவித்தார்.
டி.சந்ரு, எஸ்.கே.குமார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago