2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

அமர்ந்து அமரரானார்

Editorial   / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ரயிலில் பயணிக்க வந்த பயணி அமர்ந்து அமரராகிய சம்பவமொன்று ஹட்டன் ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா, நல்லத்தண்ணி முல்லுகாமம் கீழ் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட பி.எஸ். ஆறுமுகம் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரயில் வரும் வரையில் பயணிகள் ஓய்வெடுக்கும் கதிரையில் அமர்ந்திருந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார் என்று ஹட்டன் பொலிஸ் தெரிவித்தனர்.

அவருடைய உடல், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .