2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அப்படியே கிடந்து அச்சுறுத்திய மலைப்பாம்பு

Mayu   / 2024 ஜனவரி 16 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரையை விழுங்கிய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்ல முடியாமல் வீடொன்றுக்கு முன்பாக படுத்துக்கிடந்தமையால் அந்த கொலனியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு வகையான பீதி ஏற்ப்பட்டது.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம விநாயகம்புரம் கொலனியிலுள்ள வீடொன்றுக்கு திங்கட்கிழமை (15) இரவு வந்த மலைப்பாம்பு வீட்டின் கதவுக்கருகே  படுத்துள்ளது.

அந்த மலைப்பாம்பு மறுநாள் செவ்வாய்க்கிழமை (16) காலை வீட்டின் பின்னாலுள்ள நாற்காலிக்கிடையில் சுருண்டு கிடந்துள்ளது.

மேலும், மலைப்பாம்பு முன்னோக்கி செல்ல முடியாமல் வீட்டிற்கு அருகில் கிடப்பதாக அந்த வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நுவரெலியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ​​இரையை விழுங்கிய மலைப்பாம்பு, சில நாட்கள் தங்கியிருந்து பின்னர் காட்டுக்கு செல்லும் என எனவே மக்கள் அச்சமடைய தேவையில்லையெனவும் குறித்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும் வீட்டின் அருகே தங்கியுள்ள மலைப்பாம்பை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஞ்சித் ராஜபக்க்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .