Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 31 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 பிரதேச செயலகங்களின் நிர்வாக எல்லைக்குள் வசிக்கும் அரச உத்தியோகத்தர்களின் நலன் கருதி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் முதல் இனி வரும் காலங்களில் அஞ்சல் மூலம் வாக்கு பதிவுகளுக்கு தேவையான வாக்களிப்பு மத்தியநிலையங்களை உருவாக்குமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன .
ஏற்கனவே அம்பேகமுவ பிரதேசத்தில் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் . தலவாக்கலை பிரதேச செயலக நிர்வாக எல்லைக்கு இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை என பலரும் விசனம் தெரிவிக்கின்றனர். இது வரை காலமும் இங்குபணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் அஞ்சல் வாக்கு பதிவுகளுக்காக தொலைதூரத்தில் உள்ள நுவரெலியாவிற்கு சென்று தமது அஞ்சல் மூல வாக்குகளை பதிவு செய்து வந்துள்ளனர்.
இதன் போது பல்வேறு சிரமங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையும் தோன்றியுள்ளது எனவேஇவ்வாறான சிக்கல்களை தவிர்ப்பதற்காக இனிவரும் காலங்களிலாவது அரச உத்தியோகத்தர்களின் நலன் கருதி புதிய வாக்களிப்பு மத்திய நிலையங்களை உருவாக்கித் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது..
குறிப்பாக தலவாக்கலை பிரதேச செயலக நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரச உத்தியோகத்தர்களின் வசதிகளுக்கு ஏற்ப குறித்த பிரதேச செயலக கட்டிடம், கோட்டக் கல்வி காரியாலயங்கள், உள்ளூராட்சி மன்றத் காரியாலயங்கள் ஆலயங்கள் மற்றும் அரச பாடசாலைகள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அஞ்சல் மூல வாக்குப்பதிவு நிலையங்களாக உருவாக்கி கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மலையக ஆசிரியர் முன்னணியின் பிரதானிகள் மாவட்டத்தில் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் கல்வி அதிகாரிகளுடன் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் குறித்த வேண்டுகோள் தொடர்பில் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது எவ்வாறாயினும் இம்முறை நடைபெறவிருக்கும் உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல பதிவுகள் இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் நிலையில் இதன் போது புதிய வாக்களிப்பு மத்திய நிலங்களை தலவாக்கலை பிரதேசசெயலகம் நிர்வாகப் பிரிவுகள் ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்டத்திற்கு பொறுப்பான தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனபகிரங்க வேண்டுகோள் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டு வருகின்றது.
சுஜித் சுரேன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .