Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Janu / 2023 ஒக்டோபர் 26 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இணங்க பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவர் நாளொன்றுக்கு 8 மணித்தியாலம் வேலை செய்தால் ஒரு நாள் வேதனமாக ஆயிரம் ரூபாய் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.
வர்த்தமானியில் கிலோகிராம் தொடர்பில் எதுவித அறிக்கையும் இல்லை என தொழில் ஆணையாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற அலகொல்ல, லகிலேண்ட்,கம்பாஹா, கேகீல்ஸ் பெருந்தோட்ட தொழிலாளர்களினால் தொடர்ந்தும் நடாத்தப்படுகின்ற அகிம்சை வழி போராட்டம் தொடர்பில் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. கொழும்பு தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் தலைமையில் புதன்கிழமை (25) கலந்துரையாடல் இடம்பெற்றது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் ,
”மேற்படி பெருந்தோட்ட தொழிலாளர்களின் லாப கொடுப்பனவு தொடர்பான பிரச்சினையை மத்தியஸ்தர் சபையின் ஊடாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வேலை நிறுத்தப்பட்டிருந்த 21 நாட்களுக்கும் நாளொன்றுக்கு 1,000 ரூபாய் என்ற அடிப்படையில் 21 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் என்பதனை தொழில் ஆணையாளர் ஏற்றுக் கொண்டுள்ளார்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
4 hours ago