2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

600 கசிப்பு போத்தல்கள் மீட்பு ; ஐவர் கைது

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தேக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அடலஹாகொட பிரதேசத்தில் மலை உச்சியில் உள்ள  பழைய  வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 சட்டவிரோத மதுபான போத்தல்கள் அடங்கிய 15 பாரிய உறைகள்  வத்தேகம  பொலிஸாரால் சனிக்கிழமை (05) கைப்பற்றப்பட்டன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படிஇந்த கசிப்பு போத்தல்கள் பண்டிகை காலங்களில் விற்பனை செய்வதற்காக   கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.  சட்ட விரோதமான மதுபான போத்தல்களை  மறைத்து வைத்திருந்ததாகக் கருதப்படும் பிரதான சந்தேக நபர் உட்பட ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் இதற்கு முன்னரும் இவ்வாறு பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டு, தண்டனை பெற்றவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பாக வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மொஹொமட் ஆஸிக்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .