2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

5.கி.கி போதைப்பொருளுடன் ஹட்டனில் ஒருவர் கைது

Editorial   / 2024 நவம்பர் 26 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள என்.சி போதை பொருள்  தயாரிப்பதற்கான பொருட்கள் ஐந்து  கிலோ கிராமுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு  விற்பனை செய்யும் நோக்கிலேயே என்.சி போதைப்பொருள்  தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹட்டன் காமினி புர பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 50 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால்  செவ்வாய்க்கிழமை (26)  கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் நகரில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வரும் குறித்த நபர்,  இளைஞர் ஒருவருக்கு என்.சி போதை பொருளை  விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது  அவரது  வீட்டில் என்.சீ. போதை பொருள் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை தூள்  உள்ளிட்ட 5 கிலோ 750 கிராம்  திரவிய பொருட்களை   மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஹட்டன்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .