2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

Janu   / 2025 ஏப்ரல் 22 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லதன்னி பிரதேசத்தில் இருந்து கினிகத்ஹேன, பொல்பிட்டிய நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கெசல்கமுவ ஓயா வில் விழுந்துள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

காரின் ஓட்டுநர் காயமடைந்து லக்ஷபான பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லதன்னி-கினிகத்ஹேன பிரதான வீதியில் உள்ள நோட்டன் பிரிட்ஜ் எடிட் பகுதியில் செவ்வாய்க்கிழமை (22) காலை 7.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காரில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, குறித்த கார் விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

ரஞ்சித் ராஜபக்ஷ              

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .