2025 மார்ச் 31, திங்கட்கிழமை

2 பரீட்சார்த்திகள் மாயம்

Editorial   / 2025 மார்ச் 27 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எழுதச் சென்ற  பாடசாலை மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16 வயதுடைய இந்த இரண்டு மாணவர்களும் மஹியங்கனையில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் 26 ஆம் திகதி பாடசாலை சீருடையை அணிந்து, மஹியங்கனை தம்பராவ பரீட்சை மையத்திற்குச் செல்வதாகக் கூறி வீடுகளை விட்டு வெளியேறினர்.

தேர்வு எழுதச் சென்றிருந்த இருவரும் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் மஹியங்கனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பாலித ஆரியவங்ச

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X