2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

2 சிறுமிகள் மாயம்: பொலிஸார் தேடுதல் வேட்டை

Editorial   / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நன்னடத்தை திணைக்களத்தின் மேற்பார்வையில் பிபில பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுமிகள் காப்பகத்தில் இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக சிறுமிகள் இல்லத்தின் உதவி கண்காணிப்பாளர் பிபில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச் சிறுமிகள் தெபல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயின்று வருவதாகவும், பாடசாலைப் பைகளை வகுப்பறையில் வைத்துவிட்டு பாடசாலையை விட்டு வெளியேறியதாகவும், சிறுவர் இல்ல உதவி காப்பாளருக்கு அதிபர் அறிவித்ததையடுத்து அவர்கள் திரும்பவில்லை என அறியமுடிகின்றது,

அனாதை இல்லத்திற்கு, உதவி காப்பாளர் பிபில பொலிஸ் முறைப்பாடு  செய்தார். பதினாறு வயதுடைய இரு சிறுமிகள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. சிறுமிகளைத் தேடுவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிபில பொலிஸ்  பேச்சாளர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .