2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

மர்மமான நோயினால் ஐவர் பலி: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Editorial   / 2018 மே 17 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்தில் பரவி வரும் மர்மமான நோயினால் கடந்த மாதத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதால் இந்​த நோய் தொடர்பில், சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மர்மமான நோயானது, அசாதாரணமாக நோயாளிகளின் சுவாச அமைப்பு முறையை பாதிக்கும் என கராபிட்டிய போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் மட்டுமே 5 பேர் உயிரிழக்க காரணமான இந்த மர்மமான நோயை அடையாளம் கண்டுக்கொள்வதற்கான பரிசோதனைகளை சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், மேற்கொண்டு வருவதாக ​அறிவித்துள்ளது.

நிமோனியா நோய்க்கான காய்ச்சல்,சுவாசப் பிரச்சினைகள் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளே இந்நோய் தொற்றுக்குள்ளானவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளாக இனங்காண​ப்பட்டுள்ளதாகவும், இது ஒருவகையான வைரஸினால் ஏற்படும் எனவும் கராபிடிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஜயம்பதி சேனாநயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும், இந்த மர்ம நோயிலிருந்து தென் மாகாண மக்களை பாதுகாப்பதற்கான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .