Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 மார்ச் 28 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதினா ஒரு அற்புதமான மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் மருத்துவ பயன்களை அறிந்துகொண்டால் தொடர்ந்தும் பயன்படுத்தலாம்.
புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைதரேற்று, நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், மற்றும் தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சமாகும்.
அசைவ உணவு வகைகள் மற்றும் கொழுப்பு உணவுகளை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாக்க, பசியை தூண்ட, மலச்சிக்கலைப் போக்க மற்றும் பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகள் தீர மற்றும் ஆண்மைக்குறைவை நீக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.
புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீழ்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.
புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.
புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும். புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago