Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 09, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 19 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெய் உடலுக்கு ஆரோக்கியமானதுதானா, என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும் ஒன்றாகும். நெய்யை அளவோடு எடுத்து கொண்டால் ஆரோக்கியமானதுதான்.
சுத்தமான நெய்யில், பேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகளின் சதவீதம் குறைவாகவே காணப்படும். இதய நோய் மற்றும் அதிக எடை இல்லாமல் இருப்பவர்கள், சுத்தமான நெய்யை சாப்பிடலாம், ஒரு நாளைக்கு 10 -15 கிராம் நெய் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்களுக்கு, நெய் சிறந்தது. ஏனெனில் வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது.
நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிப்பதுடன், செரிமானத்தையும் அதிகரிப்பதால், நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும்.
மேலும் நெய்யில் விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை உள்ளதால், உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, இரத்த சுழற்சியை மேம்படுத்தும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
41 minute ago