Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Amirthapriya / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து சாப்பிட்டுவர, பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், இரத்தசோகை, மண்ணீரல் கோளாறுகள் மற்றும் குடற்புண் போன்றன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.
மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் வலிக்கு சிறந்தத் தீர்வாக நாவற்பழம் விளங்குகின்றது. அதுமட்டுமின்றி, இது நீரிழிவு நோயையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. நீரிழிவு நோயாளிகள் நாவற்பழத்தின் விதைகளை எடுத்து, அவற்றை இடித்து தூள் செய்து தினசரி காலை, மாலை 1 கிராம் அளவு எடுத்து, தண்ணீருடன் கலந்து குடித்துவர, இந்நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் நாவற்பழத்தை 3 வேளை தவறாமல் சாப்பிட்டுவந்தால், 15 நாட்களில 10 சதவீதத்தை குறைத்துவிடலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago