Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Piriyadharshini / 2018 மே 30 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொய்யாப்பழத்தில் பலவகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் தேன்பழம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிறக் கொய்யா இதனை “ஜமைக்கன் செர்ரி” என்றும் அழைப்பார்கள்.
இவை சாலையோரங்களில் காணப்படும். இனிமையான சுவையுடன் கூடிய பழங்களை கொண்டது. இது கோடை காலங்களில் பழுத்து பயன் தரக்கூடியது.
இதன் இலைகள், பூக்கள், கனிகள், வேர், பட்டை என அனைத்துமே மருத்துவக் குணமுடையது.
தேன் கொய்யாப் பழங்கள் நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகிறது. இதில், விற்றமின் ‘சி’, இரும்பு சத்து, கல்சியம், நீர்ச்சத்து என்பன அதிகம் காணப்படுகின்றது.
தேன் பழங்கள் செர்ரிப்பழம் போன்று சிவந்த நிறத்தில், தேன் போன்று இனிக்கும் சுவையுடன் இருப்பதனாலோ என்னவோ இதற்கு தேன்பழம் என்று பெயர்.
இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதுடன், இதன் இலைகள் வயிற்றுவலி, மூட்டுவலியைக் குணப்படுத்தக் கூடிய மருந்தாகப் பயன்படுகின்றது.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட தேன் பழத்தின் இலைகள் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் மூலிகையாக விளங்குவது இதன் சிறப்பம்சமாகும்.
தேன் கொய்யாப் பழத்தின் இலைகளைப் பயன்படுத்தி தசை, மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்துக்கான மேல் பூச்சாகவும் பூசலாம்.
தேன் பழத்தின் இலைகளை நீரில் இட்டு காய்ச்சி அருந்திவர வயிற்று வலி குணமடையும்.
நமக்கு எளிதாக கிடைக்கும் இந்த மூலிகையை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு உடல் நலன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
21 Dec 2024