Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூலை 01 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணினி மற்றும் அலைபேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்பொழுது நாளடைவில் அளவுக்குமீறி பெருகிவிட்டது. கணினியை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், அதே நேரத்தில் கணினியில் இருந்து வெளிப்படும் கதிர்களிடமிருந்து கண்களைப் பாதுகாத்துக் கொள்வதும் மிக அவசியம்.
தொடர்ச்சியாக கணினியை பயன்படுத்துவோர் சந்திக்கும், முதல் பிரச்சினைகள் ஏராளம். அதில் முக்கியமாக பார்வைக் கோளாறுகள், தலைவலி, மந்தமான பார்வை, ஒளியை காணும்போது கண் கூசுதல், கண் சிகப்பு அடிக்கடி ஏற்படுதல், கண்வலி, கழுத்து மற்றும் பின் முதுகுவலி, நிறங்கள் மங்கலாக தெரிதல், கண் உலர்ந்து காணப்படுதல், மற்றும் கண் எரிச்சல் போன்றவை, கண்களுக்குண்டான பிரச்சினைகளை உறுதிப்படுத்தும்.
இந்த பிரச்சினைகளுக்கு, 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்று பெயர். கணினியைப் பயன்படுத்தும், 80 சதவீத பேருக்கு இந்த, 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' வர வாய்ப்பு உள்ளது. சிறு வயதிலேயே கணினியை உபயோகிக்கும் குழந்தைகளுக்கு, கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
கணினியை, கண் பார்வையில் இருந்து, 20 முதல் 26 இன்சுகள் தள்ளியிருக்கும்படி, அமைத்துக்கொள்ள வேண்டும். கணினி இருக்கும் அறையில், வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்வதுடன், 'பளீர்' என்ற வெளிச்சமோ, மங்கலான வெளிச்சமோ இல்லாமல், மிதமான வெளிச்சமாக இருக்க வேண்டும்.
தொடர்ச்சியாக கணினியை பயன்படுத்தி, கண் சிமிட்டல் குறைந்து போனவர்கள், அடிக்கடி சிமிட்டலை தொடர வேண்டும். அதுமட்டுமின்றி கண்களை மூடி, வட்டச் சுழற்சி முறையில், ஒரு முறை சுழற்றி, மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, பின்னர் கண்களை திறந்து, மூச்சை மெதுவாக விட வேண்டும்.
இவ்வாறு செய்துவர, நாளடைவில் கணினி பயன்பாட்டாளர்கள் அனைவரும் கண் பிரச்சினைகளிலருந்து விடுபடுவதை அவதானிக்கலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
6 hours ago
8 hours ago