2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

ஒரு நாளைக்கு எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும் தெரியுமா?

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 28 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கேமல்லியா சினென்சிஸ் செடியின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிரீன்  டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இது நரம்புகளை தளர்த்த உதவுகிறது, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள் இருப்பதால் ஏற்படும் உயிரணு சேதத்தை குறைக்கிறது.

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ஞாபக சக்தியையும் அதிகரித்து மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியான தூக்கத்தை வழங்குகின்றது.

எனவே, இன்று அநேக மக்களின் தெரிவு கிரீன் டீ -யாகவே இருக்கின்றது. இதனை ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கிரீன் டீ குடிப்பதற்கு சரியான நேரம் இதுதான் என்பதை குறிப்பிட ஆதாரங்கள் இல்லாத போதிலும், இரவில் தூங்கும் முன்பு இதனைக் குடித்தால் தூக்கத்தை பாதிக்கின்றது. இதற்கு காரணம் மூளையின் விழிப்புணர்வை அதிகரிப்பதே ஆகும்.

ஆகவே, படுக்கைக்கு செல்லும் முன்பு 2 அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பு குடிப்பதால் உங்கள் மன அழுத்தத்தை போக்கி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
 
நிபுணர்களின் கணிப்பின்படி, ஒரு நாளைக்கு 2 தொடக்கம் 3 கப் கிரீன் டீ குடித்தால் போதுமான பலன் கிடைக்கும். ஆனால், அதற்கும் மேல் எடுத்துக்கொண்டால் சில தருணங்களில், குமட்டல், தூக்கமின்மை மற்றும் இரத்த சோகை போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .