Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனிதர்களுக்கு ஏற்படும் 75 சதவீதமான நோய்களுக்கு, உடலில் ஏற்படும் வெப்பமே (உடல் உஷ்ணம்) காரணமாகிறது. இரவு தூங்கி எழும்போது, நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.
காலை எழுந்ததும் இந்த வெப்பக் கழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிர்ந்த நீரில் குளிப்பது அவசியம். வெந்நீரில் குளிக்கக் கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே, மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடவும் கூடாது. இது முற்றிலும் தவறு.
நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாகத் தலை.
குளிர்ந்த நீரை முதலில் காலில் ஊற்றினால்தான் வெப்பம், கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும். நேரடியாகத் தலைக்கு ஊற்றினால், வெப்பம் கீழ் நோக்கி சென்று, வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
ஆரம்ப காலங்களில், நமது முன்னோர்கள், குளிப்பதற்கு குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நனையும்போது, வெப்பம் கீழிருந்து மேல் எழுப்பி, இறுதியில் தலை முங்கும்போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும் என்பதே, இதற்கு முக்கிய காரணம்.
இறங்கும் முன்பாக உச்சந்தலைக்கு, சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள். உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது என்பதற்காகவே, இவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.
சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். எனவே உச்சியில் சிறிது நனைத்து விட்டால், குளத்தில் இறங்கும் போது கீழிருந்து மோலாக எழும் வெப்பம், சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறி விடுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
6 hours ago
8 hours ago