Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 30, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூன் 18 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அருமையான மருத்துவ குணம் கொண்ட கொள்ளு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.
கொள்ளை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும். முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளை எடுத்து, தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், விரைவில் உடல் எடை குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.
இதனை வேகவைத்து, அந்த நீரை குடித்து வந்தால் சளி குணமாகும். ரசமாக வைத்து சாப்பிட்டால், உடல் வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைகள் சரியாகும். சுவாசத் தொந்தரகளைவு நீக்கி காய்ச்சலையும் குணமாக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன. இது உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும். நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புகளுக்கும் நரம்புகளுக்கும் வலுசேர்க்கும். இதை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி, கஞ்சியாக உட்கொள்ளலாம். இதனால், பசியின்மை நீங்கி உடல் வலுவாகும்.
கொள்ளு ஆன்டி-ஹைப்பர்கிளை செமிக் உணவு வகையை சேர்ந்தது. எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது. கொள்ளை ஊற வைத்து, ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால், இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago