2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

உடலில் உற்பத்தியாகும் இரத்தத்தின் அளவு

Editorial   / 2018 மார்ச் 06 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடலில் சுமார் 2 மில்லியன் செங்குருதி சிறுதுணிக்கைகள் விநாடிக்கு உற்பத்தியாகின்றது. இது எலும்பு மச்சையில் இரத்த உயிரணுக்கள் (ஸ்டெம் செல்கள்) மூலம் உருவாக்கப்படுகின்றது. இந்த செயல்முறை ஒரு நபரின் வாழ்க்கையில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. பொதுவாக செங்குருதி சிறுதுணிக்கைகள் உருவாவதற்கு உடலுக்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றது. அதாவது 04 முதல் 06 வாரங்கள் வரையான காலம் தேவைப்படுகின்றது.

செங்குருதி சிறுதுணிக்கைகள் ஹீமோகுளோபினில்  இருந்து தனது நிறத்தை பெறுகின்றது. ஹீமோகுளோபின் இரும்புச் சத்தை அதிகம் கொண்டுள்ளது, அதனால் ஒரு நபர் இரத்த தானம் வழங்கும்போது, ​​இந்த இரும்பு சத்தானது இழக்கப்படுகின்றது. இதில் இருந்து சாதாரண நிலைக்குத் திரும்ப 06 முதல் 12 வாரங்கள் வரையான காலம் தேவைப்படுகின்றது. இதனால், இரத்த இழப்பீட்டுக்குப் பிறகு உடலில் இரும்புச் சத்தை அதிகரிக்க தேவையான இரும்புச் சத்து நிறைந்த உணவுகளையும் நீர் ஆகாரங்களையும் அதிகமாக  உட்கொள்ள ​வேண்டும்.

இரத்தம் பல்வேறு பகுதிகளால் ஆனாது. ஒவ்வொரு பகுதியும் சுகாதாரத்தை பராமரிப்பதில் வேறுபட்ட பங்கைக் கொண்டுள்ளது. செங்குருதி சிறுதுணிக்கைகள் ஒக்சிஜன், கார்பன் டை ஒக்சைட்  ஆகியவற்றைக் கொண்டுள்ளது.  வெண்குருதி சிறுதுணிக்கைகள் நோய்த் தொற்றுக்கு எதிராக உடலை பாதுகாக்க உதவுகின்றது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X