Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 08, புதன்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 03:41 - 0 - 234
இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி,தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் அல்லது அறிகுறிகள் நோய்க்கான தோன்றும்.
தண்டுக் கீரையை களைந்து அதனுடன் சிறிது மிளகு, சிறிது மஞ்சள், கொஞ்சம் தேங்காய்பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால், நாக்கிற்கு சுவையாகவும் இருக்கும் இரத்தமும் சுத்தமாகும்.
அத்துடன் நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால், உடலிலுள்ள பலவிதமான நோய்களும் குணமாகும். இதுமட்டும் இல்லாமல் வெறும் நெல்லிக்காயை மட்டுமே அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
புதினா இலை மற்றும் வேப்பிலை ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து, நன்கு கழுவிய பின்னர், இரண்டு இலைகளையும் அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அல்லது ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஒரே மாதத்தில் தூய்மையாகும்.
முருங்கைக் கீரையை சுத்தம் செய்த பின்னர், துவரம் பருப்புடன் சமைத்து ஒரு முட்டையை உடைத்து விட்டு, கிளறி பசும் நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
மேலும் அருகம்புல் சாறுடன் கீழாநெல்லி சேர்த்து அரைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாவதோடு இரத்தமும் தூய்மையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago